Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Saturday, 22 November 2008

அவன்

நீ புரிந்துக்கொள்வாய் என நினைத்தேன்
புரிந்தும் புரியாததுபோல் நிற்கிறாய்
புரியவைக்க முயற்சித்தேன்
வார்த்தையால் என்னை கொல்லுகிறாய்
வேண்டினேன் உன் உறவை என்றும்
கிடைத்தது என் கண்ணீரின் துளிகள் மட்டும்.

தனிமையின் தவிப்பு

கையை பிடித்து நடக்கும்பொழுது தெரியவில்லை
பயம் என்றால் என்னவென்று!
துரத்திக்கொண்டு சோர் ஊட்டும்பொழுது தெரியவில்லை
பசி என்றால் என்னவென்று!
தோளில் சாய்ந்துக்கொண்டு தூங்கும்பொழுது தெரியவில்லை
உறக்கம் என்றால் என்னவென்று!
இன்றோ உங்களை விட்டு பிரிந்திருக்கையில் தெரிகிறது
இவை அனைத்தின் மகிமை என்னவென்று...